சந்திரபாபு நாயுடு நல்லவரா?.. இந்த காரணத்திற்கு தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை.. தாக்கிய ரோஜா!!

Spread the love

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஊழல் வழக்கில் கைது செய்த சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியதற்கு அமைச்சர் ரோஜா(mla roja) கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 2018-ம் ஆண்டு காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ. 371 கோடி கைமாறியதில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் பெயரில் கடந்த செப்டம்பர் 9 தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ,சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து பேச முற்பட்டனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷிடம் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசியதாகவும், மக்கள் போராளியான சந்திரபாபு விரைவில் பாதுகாப்பாக வெளியே வருவார் என ஆறுதல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆந்திரப்பிரதேச மாநில அமைச்சர் ரோஜா, சந்திரபாபு நாயுடுவிற்கு ஆதரவு அளிப்பதால் ரஜினிகாந்த்தின் மரியாதை தான் குறையும் என தெரிவித்தார்.

மேலும், மக்களின் நலனுக்காக சிறை சென்றவர்களுக்கு ஆறுதல் கூறுவது சரியாக இருக்கும்.ஆனால், ரஜினி ஏன் திருடர்களுக்கு ஆதரவு தருகிறார் எனக் கேள்வி எழுந்திருப்பதாகவும் கூறினார்.

சந்திரபாபு நாயுடு நல்லவர் என சொன்னால் மக்கள் யாரும் நம்பமாட்டார்கள் என்று தெரிவித்த அவர் தன்னை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என எண்ணியதால் தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை எனவும் ரோஜா கடுமையாக விமர்சித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours