ஆருத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கு – 3 பேர் கைது!

Spread the love

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து, தலைமறைவான ரூசோ மற்றும் ஆவடியில் கிளை தொடங்கி மோசடி செய்த தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி, ஆருத்ரா கோல்டு நிறுவனம் தமிழகம் முழுவதும் ஏராளமான பொதுமக்களிடம் சுமார் ரூ.2400 கோடியை மோசடி செய்தது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதது. இந்நிலையில் சென்னை ஆவடியில் ஆருத்ரா கிளை நிறுவனம் தொடங்கிய அருண்குமார், ஜெனோவா தம்பதி, 8 ஆயிரம் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.134 கோடி மோசடி செய்தனர்.

இந்நிலையில் இத்தம்பதியின் சொத்துகளை, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடக்கினர். மேலும் அவர்களின் 5 வங்கிக் கணக்களையும் முடக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து அருண்குமார், ஜெனோவா தம்பதி கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த ஆருத்ரா நிறுவன இயக்குநர்களில் ஒருவரான ரூசோ தலைமறைவானார்.

அவரை போலீஸார் ‘லுக்அவுட்’ நோட்டீஸ் அனுப்பி தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ரூசோவையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours