தனியாக இருந்த பெண்ணை கொலை செய்த மூவர் !

Spread the love

மகனின் தீயப்பழக்கங்களைச் தாயாரிடம் சொன்ன ஆத்திரத்தில் தனியாக இருந்த பெண்ணை நண்பர்களோடு சென்று கொலை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை திருவான்மியூரில் மது அரக்கனால் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் குறித்த விவரம் வருமாறு;-திருவான்மியூர் ரங்கநாதன்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னி (58). இவரது மகள் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். மருமகன் அய்யப்பன், மாமியார் பொன்னியை கவனித்து வந்துள்ளார்.

வியாழக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பிய அய்யப்பன், மாமியார் பொன்னி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதுகுறித்த தகவலில் சம்பவ இடம் வந்த திருவான்மியூர் போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த பொன்னியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்துவழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் அருள்மணி(19)க்கும், பொன்னிக்கும் தகராறு இருந்து வந்தது தெரியவரவே, அவரைப் பிடித்து விசாரித்தபோது பகீர் தகவல்கள் வெளியானது.

மதுப்பழக்கத்துக்கு அடிமையான அருள்மணி, அவ்வப்போது பெண்களையும் தனது அறைக்கு அழைத்து வந்து கூத்தும் கும்மாளமுமாக இருந்துள்ளார்.இதனை பொன்னி கண்டித்ததோடு, அருள்மணியின் அம்மாவிடம் மகன் குறித்து புகார் அளித்ததாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளார்.அம்மா திட்டியதால் ஆத்திரமடைந்த அருள்மணி, இதற்கு காரணமான பொன்னியை சும்மா விடக்கூடாது என்று முடிவெடுத்துள்ளார்.வியாழக்கிழமை, மருமகன் வேலைக்கு சென்றதும், பொன்னி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அருள்மணி , தனது நண்பர்களான பெசன் ட் நகர் விக்னேஷ்(20), திருவான்மியூர் தினகரன்(21) ஆகியோருடன் சேர்ந்து பொன்னியை கழுத்தை அறுத்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து இளம் வயது நபர்களான அந்த மூவரையும் திருவான்மியூர் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அமீரின் இயக்கத்தில் ஜீவா நடித்த ராம் படத்தில், பக்கத்துவீட்டு இளைஞர் போதைப்பழக்கத்துக்கு அடிமையானதை பெற்றோரிடம் கூறுவதாகச் சொல்லும் சரண்யா கொலை செய்யப்படுவது போல காட்சி இருக்கும்.

திருவான்மியூரிலும், இளம்வயது நபரின் மது உள்ளிட்ட தகாத பழக்கத்தை பெற்றோரிடம் சொன்னதாலேயே பக்கத்து வீட்டு பெண் கொலையாகி இருப்பது சினிமா காட்சியை நிஜமாக்கி இருக்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours