ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு – கோவையில் என்ஐஏ சோதனை!

Spread the love

கர்நாடக மாநிலம், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக, கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் இரண்டு மருத்துவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக இருந்து வரும் இரண்டு மருத்துவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கர்நாடக மாநில என்ஐஏ அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் சென்னையிலிருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் கோவை போலீஸார் துணையுடன் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் இக்பால், நயிம் சாதிக் ஆகிய இருவரும் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வருகின்றனர். இதில் நயிம் சாதிக் இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடித்துள்ள நிலையில், ஜாபர் இக்பால் இரண்டாவது ஆண்டாக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை இவர்கள் தங்கியுள்ள இல்லங்களுக்கு சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்

கோவை போலீஸார் உதவியுடன் சாய்பாபா காலனியில் சுப்பண்ண கவுண்டர் வீதி, நாராயண குரு வீதி ஆகிய இடங்களில் சோதனை நடத்திய தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஒரு மணி சோதனைக்கு பின்னர் கிளம்பினர். தனியார் மருத்துவமனையிலும் இருவர் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி சென்றனர். என்ஐஏ சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours