லேப் டெக்னீசியன் வேலை: உடனே விண்ணப்பிங்க!!

Spread the love

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி Lab Technician, Pharmacist, Dental Hygienist, Nursing Assistant, Female Attendant பணிக்கென காலியாக உள்ள 5 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Pharm, B.Sc, D.Pharm, Diploma, DMLT, Literate, Nursing என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 மற்றும் 58 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.16,800/- முதல் ரூ.28,100/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.05.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணாணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இந்த பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours