நாவூரும் மஷ்ரூம் பட்டர் மசாலா: இப்படி செய்து பாருங்க!

Spread the love

இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்ற அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடும் சுவையான மஷ்ரூம் பட்டர் மசாலா கறி எப்படி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

200 கிராம் பட்டன் மஷ்ரூம்
2 பெரிய வெங்காயம்
2பெங்களூர் தக்காளி
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
1 டீஸ்பூன் மிளாய்த்தூள்
1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
2 டேபிள் ஸ்பூன் பட்டர்
தேவையான அளவுஉப்பு
1/2 கப் ஃப்ரெஷ் கிரீம்
1 டீஸ்பூன் கசூரி மேத்தி
மல்லி இலை

செய்முறை:

மஷ்ரூமை நன்கு கழுவி,நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி,கல் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு,அதில் நறுக்கி வைத்துள்ள மஷ்ரூம் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைத்துவிட்டு தண்ணீரை வடித்துவிட வேண்டும்.

வெங்காயம், தக்காளியை மிக்ஸியில் சேர்த்து தனித்தனியாக,விழுதாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து. உருகியதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். அத்துடன் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது சேர்த்து வதக்க வேண்டும். இதைத் தொடர்ந்து அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம்,தக்காளி விழுது பச்சை வாசம் போனதும் மசாலாப் பொருள்கள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தயாராக வைத்திருந்த காளான் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

கடைசியாக கிரீம் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும். எல்லாம் சேர்ந்து வெந்து நெய் மேலே பிரிந்து வரும் போது கசூரி மேத்தி,மல்லி இலை தூவி இறக்கவும். தயாரான மஷ்ரூம் பட்டர் மசாலாவை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.

இப்போது மிக மிக சுவையான, சத்தான மஷ்ரூம் பட்டர் மசாலா கறி சுவைக்கத் தயார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours