Tamil Nadu

கார்த்திக் முதல் பரிசு பெற்றதாக அறிவித்தது செல்லாது.. அபி சித்தர் வழக்கு !

0 comments

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்த நிலையில் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் [more…]

Tamil Nadu

கீழக்கரை ஜல்லிக்கட்டை கொடியசைத்து துவக்கிவைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 62.78 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து காலை 11.10 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கோயில் [more…]

Tamil Nadu

கலைஞர் ஏறு தழுவுவதல் அரங்கத்தை’ நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் !

0 comments

மதுரை அலங்காநல்லூரில் 66 ஏக்கர் பரப்பளவில், ரூ.44 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த ஜல்லிக்கட்டுமைதானத்தை நாளை திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வீரத்தையும் போற்றும் ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டுபோட்டிகள் உலக புகழ்பெற்றவை. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம்ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும்பார்வையாளர்கள் குவிகிறார்கள். உலகளவில் கவனம் ஈர்த்தாலும், இதுவரை தமிழகத்தில் முறையான, நவீன வசதிகளுடன் கூடிய மைதானம்ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தமிழகத்தில் இல்லாமலே இருந்து வந்தது. பல மாவட்டங்களிலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் இடம் மிக குறுகலான இடமாகவே உள்ளன. இதனால் போதிய இடவசதிஇல்லாமல் ஏராளமான பார்வையாளர்கள் போட்டியை காண வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிசெல்வதும் வாடிக்கையாகி வந்தது. புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முந்தைய நாள் இரவே சென்றாலும் பார்க்க இடம்கிடைக்காமல் பலரும் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புவதும் தொடர்ந்தது. விஐபி–களும், உள்ளூர் பார்வையாளர்களும்மட்டுமே பார்க்க முடிகிறது. இந்நிலையில், மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளை அனைத்து தரப்பினரும் பார்க்க வசதி ஏற்படுத்தும் வகையில்அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கரில் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுச் சின்னமாகபிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு திடல் அமைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில்அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, தற்போது ரூ.44 கோடியில் ஒரே நேரத்தில்ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்க்கும் வகையில் உலக தரத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம்கீழக்கரையில் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் சுமார் 4,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைக் கண்டு ரசிக்கலாம். இந்தமைதானத்தில், ஏறு தழுவுதல் போட்டிகள் மட்டுமில்லாது, பண்பாடு, கலாச்சார விழாக்கள், பல்வேறு விளையாட்டுநிகழ்ச்சிகள், கால்நடை சந்தை போன்றவையும் நடத்தப்படும் என்றும், அதன் மூலம் ஈட்டப்படும் வருவாய், மைதானம்பராமரிப்புக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தை சுற்றுலாத்துறை மூலம் ஒரு பண்பாட்டு வளாகமாக மேம்படுத்தவும்திட்டமிடப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களை நிர்வகிப்பதில் நல்ல அனுபவம் பெற்ற தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணையத்திடம் இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்பட உள்ளது

Tamil Nadu

எருதுவிடும் விழாவிற்கு அனுமதி தரக் கோரி போராட்டம் – 150 பேர் மீது வழக்கு!

0 comments

வாணியம்பாடி அருகே எருதுவிடும் விழாவிற்கு அனுமதி தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் மீது வழக்கு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே எருதுவிடும் விழாவிற்கு அனுமதி தரக் கோரி போராட்டத்தில்ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளகுட்டை கிராமத்தில் நடக்கவிருந்த எருதுவிடும்விழாவிற்கு அனுமதி வழங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பேருந்துகளைசிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tamil Nadu

எருது விடும் விழா.. 150 பேர் கைது !

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே எருதுவிடும் விழாவிற்கு அனுமதி தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளகுட்டை கிராமத்தில் நடக்கவிருந்த எருதுவிடும் விழாவிற்கு அனுமதி வழங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. அரசு [more…]

Tamil Nadu

ஜன.24-ல் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு!

0 comments

“திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” வரும் 24-ம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் கீழக்கரைக்கு [more…]

Sports Tamil Nadu

அரசு வேலை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் – அமைச்சர் உதயநிதி!

0 comments

ஐபிஎல் போட்டிகளைப் போல ஜல்லிக்கட்டுப் போட்டிகளையும் லீக் முறையில் ஆண்டு முழுவதும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும், ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் [more…]

Tamil Nadu

கோலாகலமாக முடிவடைந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு !

0 comments

கோலாகலமாக இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கருப்பசாமி கார்த்தி என்ற பட்டதாரி இளைஞர் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார். உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை கோலாகலமாக தொடங்கியது . [more…]

Tamil Nadu

மதுரை வருகை புரியும் முதலமைச்சர் !

0 comments

கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கத்தை வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் கீழக்கரைக்கு வருகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் [more…]

CRIME Tamil Nadu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – அமைச்சர் உதயநிதி தொடக்கி வைத்தார் !

இன்று காலை உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியைத் தொடக்கி வைத்தார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஆகிய மூன்று [more…]