Tamil Nadu

சென்னை பத்திரிக்கை பணியாளர் மன்றத்தை மீட்டெடுக்க துணை நிற்போம் !

அதிருப்தி செயல்பாடுகளை எல்லாம் தோலுரித்து வெளிப்படுத்தி. பல சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெடுத்தே ஆகவேண்டும் என்ற முனைப் புடன் செயல்பட்டு வருகிறது. பத்திரிக்கையாளர்கள்பலரின் ஆதரவு சக்திகளைஒன்று திரட்டி, பாரதி தமிழன் [more…]

DISTRICT

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் !

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்தசிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது ஸ்ரீமதுரை ஊராட்சி. இங்குள்ள சேமுண்டி கிராமத்தில் இடும்பன்என்பவர் வசித்து வருகிறார். சனிக்கிழமை இவரது வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. அப்போது வெளியில்சென்றிருந்த இடும்பன், வீட்டுக்குத் திரும்பி வந்த போது வீட்டுக்குள் உறுமல் சப்தம் கேட்டதும் மிரண்டுபோயிருக்கிறார். வீட்டுக்குள் சிறுத்தை இருப்பதை உறுதி செய்துகொண்ட இடும்பன், உடனடியாக வீட்டைபூட்டிவிட்டு கிராம மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்தனர். இது குறித்து நம்மிடம் பேசிய இடும்பன், “நான் தேயிலை தோட்டத்துல வேலைசெய்துவிட்டு மதியம் 12 மணி அளவில் வீட்டுக்குச் சென்றேன். அப்போது என்னுடைய வீட்டுக்குள் உறுமல் சப்தம்கேட்டது. என்னவென்று எட்டிப் பார்த்தபோது, வீட்டுக்குள் சிறுத்தை இருந்தது. என்னைக் கண்டதும், அது என் மேல்பாயப் பார்த்து. நான் சுதாரித்து, பயந்து ஓடிவந்து வெளிக்கதவை பூட்டி விட்டேன்” என்றார். இந்நிலையில், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்திசிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

National

மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு !

இலங்கை கடற்படையினரால், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவத்துக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படைப் பிரிவு தளபதி துணை அட்மிரல் ராஜேஷ் [more…]

DISTRICT

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு !

சென்னைக்கு குடிநீர் அனுப்பும் வகையில் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. இது கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். இதன் முழு [more…]

POLITICS

ஜெயலலிதாவை களங்கப்படுத்துகிறார் அண்ணாமலை – ஜெயக்குமார்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பும் நோக்கில், ஒற்றை மதவாதத்தைச் சார்ந்த தலைவர் போல பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று [more…]

Tamil Nadu

ஆளுநருக்கு டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்!

“திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து இன்று திருவள்ளுவர் தினத்தை ஆளுநர் கொண்டாடியது, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை அவமானப்படுத்தும் செயல்” என்று திமுக செய்தி தொடர்பாளர் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் திருநாள் [more…]

DISTRICT

குழந்தைகளின் இறப்பிற்கு காரணம் மின்வாரியத்தின் அஜாக்கிரதையா ?!

கோவையில் மின்சாரம் தாக்கி சிறுவன், சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பூங்காவில் மின்கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து காவல் துறையினர், மின் வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சரவணம்பட்டி அருகே துடியலூர் சாலையில் [more…]

Tamil Nadu

அதானியால் நிறுவனத்தால் தமிழக அரசுக்கு ரூ.6,000 கோடி இழப்பு!

சென்னை: தமிழக மின்துறைக்கு 2012-16 காலகட்டத்தில் அதானி நிறுவனம் தரமற்ற நிலக்கரியை விநியோகித்ததாகவும், இதனால் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் வெளியான செய்தி, மீண்டும் கிளம்பும் அதே புகார் காரணமாக பேசுபொருளாக மாறியுள்ளது. [more…]

Tamil Nadu

இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்…. முதலமைச்சர் !

“உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது” என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் [more…]