“10 நாளுக்கு ஒருமுறை “BOMB” போடும் தமிழக ஆளுநர்” – ஈ.ஆர் ஈஸ்வரன்!!

Spread the love

மத்திய அரசின் ஆணைக்கு இணங்க பத்து நாளுக்கு ஒருமுறை தமிழக ஆளுநர் “BOMB” போடுகிறார்-பல்லடத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர் ஈஸ்வரன் பேட்டி அளித்துள்ளார்.

பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரங்கேறிய கொடூர கொலை சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்தை சந்தித்து இன்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர் ஈஸ்வரன் ஆறுதல் தெரிவித்தார்.

அதன் பிறகு பல்லடத்தில் செய்தியாளர்களை சந்தித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொது செயலாளர் ஈ.ஆர் ஈஸ்வரன் பேசுகையில்..

“பல்லடத்தில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் வேதனை அளிப்பதாகவும் இதுவரை கொங்கு மண்டலத்தில் இதுபோன்ற கொடூர கொலையை நாம் கண்டதில்லை. இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகள் மீதும் குண்டர் சட்டம் பாய வேண்டும். அவர்கள் ஜாமீனில் வெளிவராதவாறு காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகை என்பது உடனடி நிவாரணம் மட்டுமே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் தொழில் வளர்ச்சி மிகுந்த கொங்கு மண்டலத்தில் இது போன்ற குற்றச்சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருவதால் காவல்துறையினர் சிறப்பு குழு அமைத்து குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள புறக்காவல் நிலையங்களை உடனடியாக திறந்து ரோந்து பணிகளை காவல்துறையினர் அதிகரிக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் காவல்துறையினர் அதிக அளவில் தென் மாவட்டங்களை சார்ந்தவர்களாக உள்ளனர். கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்த வேண்டும். பாஜகவை பொறுத்தவரை திமுக என்பது இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உருவாக்குவதில் தீவிரமாக உள்ளனர்.

நமது தமிழக ஆளுநரும் மத்திய அரசின் ஆணைக்கு இணங்க 10 நாளைக்கு ஒரு “BOMB” போட்டுக் கொண்டுள்ளார். தயவுசெய்து தமிழகத்தில் உள்ள தலைவர்கள் பாஜக விரிக்கும் வலையில் விழ வேண்டாம் மிகவும் ஜாக்கிரதியாக இருங்கள் இதில் சில தலைவர்கள் மாட்டிக் கொள்கின்றனர். அதே போன்று பீக் அவர் கட்டணம் நிலை கட்டணம் ஆகிய இரண்டும் சிறு குறு நடுத்தர தொழில்களை அளித்து வருகிறது.

இவை இரண்டையும் தமிழக அரசு தவிர்த்து சலுகை வழங்கி தொழில்களை பாதுகாக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் தொழிற்சாலைகள் மூடப்படும் லட்சக்கணக்கானோர் வேலை இழப்பர். அதேபோன்று காலாவதியான சுங்கச்சாவடிகள் அதிக அளவில் தமிழகத்தில் தான் உள்ளது மத்திய அரசு உடனடியாக இந்த சுங்கச்சாவடிகளை மூடாவிட்டால் போக்குவரத்து சார்ந்த தொழில்கள் பாதிக்கப்படும். பாரதம் என அழைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்றம் செய்யும் காலச்சூழல் தான் சரியானதாக இல்லை.

காங்கிரஸ் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்த பின்னால் பாரதம் என பெயர் மாற்றம் செய்வது சந்தேகத்தை எழுப்புகிறது. விவசாயிகளுக்கும் சமூகத்தில் சமநிலை ஏற்படுத்த அனைத்து விலைப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்”
என தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours