சிக்கிய ஐ.சி.ஐ.சி.ஐ, யெஸ் வங்கி: அபராதம் தீட்டிய ரிசர்வ் வங்கி

Spread the love

இந்தியாவில் செயல்படும் வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றது. இவற்றிற்கான விதிமுறைகள் மற்றும் வரையறைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகின்றன.

ஏதேனும் வங்கிகள் தவறிழைத்தால் அவற்றிற்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கும். அந்த வகையில் ICICI மற்றும் YES ஆகிய இரு வங்கிகளுக்கு தற்போது RBI அபராதம் விதித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் செலுத்திய கடன் தொகைக்கான விவரங்களை சரியாக பராமரிக்காமல் விட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

அதே போல, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்கவில்லை என்று அபராதமும் விதித்து உள்ளனர்.

இந்த இரண்டு காரணங்களுக்காக ஐ சி ஐ சி ஐ வங்கிக்கு ரூபாய் 1 கோடியும் மற்றும் YES வங்கிக்கு ரூ.91 லட்சமும் அபராதமாக விதித்து உள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours