இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவம்.. வெளியான தகவலால் பரபரப்பு!

Spread the love

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தின் போது, இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 9 பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டாக செயல்பட்டு இந்த கொடூர வேலையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. பொதுமக்களை பாதிக்கும் வகையிலான இப்படியொரு, தொடர் குண்டு வெடிப்பு இதுவரை நடந்ததில்லை எனவும் தெரிவித்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பத்தில் 11 இந்தியர்கள் உட்பட 269 பேர் உடல் சிதறி பலியாகிய நிலையில், 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கையில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு மற்றும் இணையதள சேவை முடக்கப்பட்டது.

மேலும், தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் பயங்கரவாத தாக்குதல் நடக்கப் போவதாக அரசுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தும், அப்போதைய அதிபர் மைத்ரிபால சிரிசேன அலட்சியமாக செயல்பட்டதாக குற்றசாட்டப்பட்டது. இது தொடர்பாக நடந்த வழக்கில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தது.

அதில், குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு, முன்னாள் அதிபர் சிரிசேனா, தன் சொந்த பணத்தில் இருந்து 2.60 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், இலங்கையில் 2019-ல் ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அந்நாட்டு உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக தொடர்பு என பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நபர் ஒருவர், ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு இலங்கை உளவுத்துறையே காரணம் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூறுகையில், இலங்கையில் பாதுகாப்பின்மையை உருவாக்கி அந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை வெற்றி பெறச் செய்ய சதித்திட்டம் தீட்டுவதற்காக உள்ளூர் ஐ.எஸ்.ஐ.எல். குழுவிற்கும், உயர்மட்ட அரச புலனாய்வு அதிகாரிக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளார்.

எனவே, இந்த பரபரப்பான குற்றசாட்டை தொடர்ந்து, விசாரணை நடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக இலங்கை அரசாங்கம் பாராளுமன்றக் குழுவை நியமிக்கவுள்ளது. விசாரணை தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours