98 வயதானவர் மீது ஆயிரக்கணக்கில் கொலை வழக்குகள்…

Spread the love

ஜெர்மனியை சேர்ந்த 98 வயது நபர் மீது, ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொலையானதற்கு துணை போனதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த தள்ளாத வயதில் வழக்கு விசாரணை மற்றும் தண்டனையை அவர் எதிர்நோக்கியிருக்கிறார்.

ஜெர்மனியில் நாஜிகளின் கொலைத் தாண்டவம் தலைவிரித்தாடிய 1943 – 1945 ஆண்டுகளில் சக்சன்ஹவுசன் என்ற வதை முகாமில் காவலராக இவர் பணியாற்றி இருக்கிறார். அங்கு நிகழ்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான கொலைகளுக்கு துணைபோனதாக, தற்போது தனது 98 வயதில் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ள இருக்கிறார். பிராங்க்பர்ட் அருகே மெயின் கின்சிக் பகுதியில் தற்போது இவர் வசித்து வருகிறார். நீதிமன்ற வழக்கு விசாரணை தொடங்கப்படாத நிலையில் அவர் குறித்தான் முழுமையான விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.

வதை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படும் மக்கள்
வதை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படும் மக்கள்
சுமார் 3000க்கும் மேலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிகழ்ந்தபோது அவர் சிறுவனுக்கான வயதில் இருந்ததால், குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் தண்டனை விதிப்பில் சட்டப்படி தொய்வு நேரக்கூடும் எனத் தெரிய வருகிறது. இப்போதும், 98 வயது முதியவரான அவரால் நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு உடன்பட முடியுமா என்பதை உறுதிசெய்ய மருத்துவர்களின் உதவியை போலீஸார் கோரியிருக்கின்றனர்.

1936 – 1945 ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அப்பாவி மக்கள், பெர்லினுக்கு வடக்கே உள்ள சக்சென் ஹவுசன் வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் பட்டினி, நோய் மற்றும் கட்டாய உழைப்பு உள்ளிட்ட காரணங்களால் துன்புற்று மடிய, மேலும் பல ஆயிரக்கணக்கானோர் விஷ வாயுவை சுவாசிக்கச் செய்து கொல்லப்பட்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours