பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் – மத்திய அரசு அறிவிப்பு

Spread the love

பிறப்பு சான்றிதழை அடுத்த மாதம் முதல் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை பெற பிறப்புச்சான்றிதழை ஆவணமான பயன்படுத்தலாம் என்றும் ஓட்டுநர் உரிமம் பெற பிறப்புச் சான்றிதழை ஆவணமான பயன்படுத்தலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், திருமண பதிவு, கல்வி அமைப்புகளில் சேரவும் பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம், 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அக்டோபர் 1 முதல் கல்வி நிறுவனத்தில் சேருதல், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண், திருமணப் பதிவு மற்றும் அரசுப் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours