7 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் !

Spread the love

மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. புதுடெல்லி, கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும். அவற்றின் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானது. மற்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் காலியாக உள்ள. 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது.

கேரளாவில் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் புதுப்பள்ளி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த, 50 ஆண்டுகளாக உம்மன் சாண்டி வென்று வந்த இந்தத் தொகுதியில், அவருடைய மகன் சாண்டி உம்மனை, காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் சார்பில் ஜேய்க் தாமஸ் நிறுத்தப்பட்டுள்ளார். கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிரெதிர் அணிகளில் உள்ளன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours