“புதிய நண்பனுக்கு வெல்கம் மெசேஜ் அனுப்பிய சந்திரயான் 2”

Spread the love

நிலவை சுற்றி வரும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-2 மிஷன் தோல்வி அடைந்தாலும் இன்று வரை சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது . இது தற்போது அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் 3 விண்கலத்திற்கு உதவி வருகிறது .

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்- 2 கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது . 48 நாட்கள் வெற்றிகரமாக பயணித்த இந்த விண்கலம் நவம்பர் 7ம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்க முயன்றது .

எல்லாம் நல்லபடி சென்றுகொண்டிருக்க திடீரென விக்ரம் லேண்டர் கருவியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது .என்னவெண்று தெரியாமல் யோசித்த நேரத்தில் சந்திரயான்-2 லேண்டரை தரையிறக்கும் முயற்சி தோல்வி அடைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் வருத்தத்துடன் தகவல் தெரிவித்தனர் .

இந்நிலையில் நிலவின் தென் துருவத்தில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள நினைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவு பகல் பார்க்காமல் கடினமாக உழைத்து சந்திரயான் – 3 விண்கலத்தை உருவாக்கினர்.

இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் – 3 கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது .

இந்நிலையில் நிலவை சுற்றி வரும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரோவின் தொடர் கண்காணிப்பில் இருந்து வரும் இந்த சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டரின் இறுதி வேக குறைப்பு நேற்று வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் தற்போது சந்திரயான் 2 – சந்திரயான் 3 லேண்டர் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours