திட்டமிட்டபடி சந்திரயான் -3 லேண்டர் இன்று நிலவில் தரையிறக்கம்..!

Spread the love

திட்டமிட்டப்படி சந்திரயான் -3 லேண்டர் நிலவில் இன்று தரையிறக்கப்படும் என்றும் இந்த வரலாற்று நிகழ்வை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் நேரலை செய்வதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் பல சோதனைகளை கடந்து தற்போது நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்குள் பயணித்து வருகிறது.

4 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 ஆா்பிட்டா் உதவியுடன் சந்திரயான் -3 யின் விக்ரம் லேண்டர் நிலவில் பத்திரமாக தரையிறக்குவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ தீவிரமாக இறங்கியுள்ளது

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக உருவெடுத்துள்ள சந்திரயான் -3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலை செய்யவுள்ளதாக இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரத்தில் . இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://isro.gov.in என்ற தளத்திலும், இஸ்ரோ யூடியூப் பக்கத்திலும், இஸ்ரோ முகப்புத்தகப் பக்கத்திலும் நேரலையில் இந்த வரலாற்று நிகழ்வை காணலாம் என அறிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இதேபோல் சந்திரயான் – 2 நிலவில் தரையிறங்கி வரலாறு படைக்கும் என காத்திருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக கடைசி நிமிடத்தில் சந்திரயான் – 2 தோல்வியை சந்தித்தது .

இந்நிலையில் இன்று உலக நாடுகள் உற்று நோக்கும் வகையில் கம்பீரமாக சென்றுகொண்டிருக்கும் சந்திரயான் – 3 இன்று மாலை நல்லபடியாக நிலையில் தரையிறங்க வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours