ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது !

Spread the love

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த குற்ற வழக்கு ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்று கூறி அவரை ஜாமீனில் விடுவிக்க முடியாது என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நீதிமன்றம் மூலம் மட்டுமே ஜாமீன் பெற முடியும்” என்று சிஐடி துணைக் கண்காணிப்பாளர் எம் தனுஞ்சயுடு அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ல் தனியார் நிறுவனத்துடன் ரூ.250 கோடிக்கு மேல் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. திட்டம் தொடங்குவதற்கு முன்பே 10% நிதியை ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த குற்றப்பிரிவு போலீசார், தற்போது அவரை கைது செய்துள்ளனர். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்கள் பணத்தைக் கொள்ளையடித்ததாகக் கூறி அவரைக் கைது செய்ய வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச சமூக நலத்துறை அமைச்சர் மெருகா நாகார்ஜுனா கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், “சந்திரபாபு ஹைதராபாத்தில் உள்ள லேக் வியூ விருந்தினர் மாளிகையை பழுதுபார்ப்பதற்கு ரூ.10 கோடி செலவழித்துள்ளார். ஓட்டுக்காக பணப்பட்டுவாடா செய்து அங்கிருந்து தப்பியோடினார். மேலும் ரூ.10 கோடி முதல்வர் அலுவலகத்திற்கும், ரூ.100 கோடி வாடகை விமானங்களுக்கும், தர்ம போராட்ட தீக்ஷாக்களுக்கு ரூ.80 கோடி” என்று நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours