கலங்கரை விளக்கமாக ஜொலிக்கும் இந்திய பொருளாதாரம் !

Spread the love

சவாலான நேரத்தில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இந்திய பொருளாதாரம் ஜொலித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா மீது உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்திருப்பதற்கான காரணங்கள் குறித்து Money Control என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளை டுவிட்டரில் பதிவிட்டு தனது கருத்துக்களை பிரதமர் வெளியிட்டுள்ளார்.

அதில் இந்திய பொருளாதாரம் வலுவான வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சவாலான நேரங்களில் நம்பிக்கையின் கீற்றாக இந்தியப் பொருளாதாரம் ஜொலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலுவான பொருளாதாரம் மற்றும் சூழலை சமாளிக்கும் திறன் மூலம், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வளர்ச்சியை தொடரச் செய்து, 140 கோடி இந்தியர்கள் வளம் பெறுவதை உறுதிபடுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours