மொராக்கோ நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 632-ஆக உயர்வு.. பிரதமர் மோடி இரங்கல்!!

Spread the love

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ நாட்டில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி சரியாக இரவு 11.11 மணிக்கு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.

முன்னதாக, இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 296 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் பலி எண்ணிக்கை 632-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்க மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ள நிலையில் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மொராக்கா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில், மொராக்கோ மக்களுடன் என் நினைவுகள் உள்ளன. அன்பானவர்களை இழ்ந்தவர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இந்த கஷ்டமான சூழ்நிலையில் மொராக்கோவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours