விநாயகரை வைத்து அரசியல்… உயர்நீதிமன்ற நீதிபதி!

Spread the love

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைக்கப்படக் கூடிய இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், விநாயகர் சிலை ஊர்வல கொண்டாடங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று சென்னை உயர்நீதிமன்ற ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலத்திற்கும் அனுமதிகோரியும் இந்து மக்கள் கட்சி மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது.

அப்போது அவர் கூறுகையில், விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது. சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல, விநாயகர் கேட்காத நிலையில் இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? கேள்வி எழுப்பி இவை தனது சொந்தக் கருத்து மட்டுமே எனவும் நீதிபதி தெளிவுப்படுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும் எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தாமோதரன் வாதம் வைத்தார். இதன்பின் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைக்க அனுமதிகோரி மனுத்தாக்கல் செய்தால் ஏற்கப்படாது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours