“விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் முதல் புகைப்படம்” போறபோக்கில் போட்ட டீவீட்டால் சர்ச்சையில் பிரகாஷ்ராஜ்

Spread the love

இஸ்ரோ விஞ்ஞானிகளின் பல வருட உழைப்பின் பலனாக நிலவை நோக்கி வெற்றிகரமாக சென்றுகொண்டிற்கும் விக்ரம் லேண்டர் நாளை மறுநாள் நிலவில் தரையிறங்க உள்ளது .

இந்நிலையில் விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை கலாய்க்கும் விதமாக நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டுள்ள ட்வீட் தற்போது சர்ச்சை ஆகி வருகிறது .

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக LVM MK 3 ராக்கெட்டில் அனுப்பட்ட 3900 கிலோ எடை கொண்ட சந்திராயன் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையை முடித்து நிலவை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது.

இந்நிலையில் ‘சந்திராயன் -3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டரின் இறுதி வேக குறைப்பு நேற்று வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 19ம் தேதி எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது.

தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை விக்ரம் லேண்டர் படம்பிடித்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வரும் 23ம் தேதி மாலை 6.04க்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் நிலவில் விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படத்தை கலாய்க்கும் விதமாக நடிகர் பிரகாஷ்ராஜ் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஒரு நபர் டீ போடுவது போன்ற கார்ட்டூன் புகைப்படத்தை பதிவிட்டுள்ள பிரகாஷ்ராஜ் அனைவருக்கும் ஒரு முக்கிய செய்தி நிலவில் விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம் தற்போது வந்துள்ளது என பதிவிட்டுள்ளார் .

இரவு பகல் பார்க்காமல் இஸ்ரோ விஞ்ஞானிகளின் பல வருட கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் நாளை மறுநாள் வெற்றிகரமாக தரையிறங்க உள்ள நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த ட்வீட் இஸ்ரோ விஞ்ஞானிகளையும், நாட்டு மக்களையும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாக பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours