கனமழையால் தொடரும் உயிரிழப்புகள்…

Spread the love

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் இமாச்சலில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் தொடர் கனமழையால் இதுவரை 60 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்லா மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த வீடுகள் இடிந்து விழுந்தன.

சிம்லா மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக மலைப் பகுதியில்  இருந்த  அடுக்குமாடி வீடுகள் இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் கட்டடம், அருகில் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் உள்ளிட்டவை நொறுங்கி விழும் காட்சிகள் உள்ளன. வீடுகள் இடிந்து விழும்போது மக்களின் அலறல் சத்தம் மனதை பதைபதைக்க வைக்கின்றன. கனமழை தொடரும் என்பதால் இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இடிபாடுகள் நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours