ஆதி ராமர் கோயிலின் மிச்சங்களா ?!

Spread the love

அயோத்தியில் ராம ஜென்மபூமிக்கான அகழாய்வில், சிலைகள், தூண்கள் என ஆதி கோயில் ஒன்றின் மிச்சங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இதற்கிடையே இந்த கோயில் கட்டுமானப் பணிகளுக்கான அகழாய்வில், ஆதி கோயில் ஒன்றின் சிலைகள், தூண்கள் உள்ளிட்டவை கிடைத்திருப்பதாக ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ராவின் பொதுச் செயலர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலையும் அகழாய்வில் கிடைத்தவைகளின் புகைப்படத்தையும் அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இப்படி சேகரிக்கப்பட்டவை அனைத்தும், தற்போது கட்டுமானப் பணியில் இருக்கும் ராமர் கோயில் வளாகத்தின் உள்ளேயே தற்காலிக கொட்டகை ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

2024, ஜன.17ம் தேதியன்று தொடங்கி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கான பணிகள் தொடங்கவிருப்பதன் மத்தியில், இந்த செய்தி பொதுவெளியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜனவரி17 அன்று தொடங்கி 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ள இந்த விழாவின் நிறைவாக ஜனவரி 21ம் தேதி அல்லது ஜனவரி 22 தேதியன்று, கோயிலின் கருவறையில் ராமர் சிலை நிறுவப்பட உள்ளது.

பிரதமர் மோடி உட்பட ஏராளமான தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ராமர் கோயிலை கட்டியெழுப்பிய கையோடு, 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக. மக்களவை தேர்தல் பிரச்சாரங்களில், வட இந்திய மாநிலங்களில் ராமர் கோயில் முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது. ராமர் கோயிலின் ஆதி பின்னணியை ஆதாரத்துடன் விளக்கும் முனைப்பில், தற்போது பழங்காலக் கோயில் ஒன்றின் மிச்சங்களும் பொது பார்வைக்கு பகிரப்பட்டுள்ளன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours