ஜி 20 அமைப்பின் நிரந்தர உறுப்பினரானது ஆப்பிரிக்க ஒன்றியம்!

Spread the love

ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பினராக இணைத்துக் கொள்ள ஆப்பிரிக்க யூனியனை பிரதமர் மோடி முன்மொழிந்தார். உலகத் தலைவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆப்பிரிக்கா யூனியனை வரவேற்றனர்

ஜி20 மாநாடு இன்று காலை டெல்லி பிரகதி மைதானம் பாரத் மண்படத்தில் 10.40 மணியளவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி, பின்னர் உரையாற்றினார்.

அப்போது ஆப்பிரிக்கா யூனியனை நிரந்தர உறுப்பினராக ஜி20 அமைப்பில் இணைக்க பிரதமர் மோடி முன்மொழிந்தார். அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவிக்க, நிரந்தர உறுப்பினரானது. பின்னர், பிரதமர் மோடி ஆப்பிரிக்கா யூனியனின் தலைவரை வரவேற்று, அவரது இருக்கையில் அமர கேட்டுக்கொண்டார். பிரதமர் முன்மொழிந்ததும், உலகத் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கைத்தட்டி ஆப்பிரிக்கா யூனியனை வரவேற்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தைப் போல ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளை உள்ளடக்கியது ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகும். இதில் 54 ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் உள்ளன. இதன் தலைவராக காமரோஸ் அதிபராக இருந்த அசாலி அசெளமனி உள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours