மகாராஷ்டிராவுக்கு மஞ்சள் எச்சரிக்கை !

Spread the love

ஜி 20 மாநாடு இன்று தொடங்கும் நிலையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையமான பாரத் மண்டபத்தில் இரண்டு நாள் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகத்தின் பல்வேறு தலைவர்கள் வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக, டெல்லி உச்சக்கட்ட பாதுகாப்பில் உள்ளது. இந்த நிலையில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, தென்மேற்கு டெல்லியின் வசந்த குஞ்ச், முனிர்கா மற்றும் நரேலா பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை மழை பெய்தது. டெல்லி வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லியில் மழை பெய்யக்கூடும் அறிவிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில் இன்று பெய்த மழை மக்களுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.

இதனிடையே, அடுத்த இரண்டு நாட்களுக்கு மகாராஷ்டிராவின் தானே, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

இன்றும், நாளையும் பால்கர் மாவட்டத்திற்கு முறையே மஞ்சள் மற்றும் க்ரீன் எச்சரிக்கைகளையும் வானிலை மையம் வெளியிட்டுள்ளது. மேலும், பால்கர், தானே, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) பால்கர் மாவட்டத்திற்கு க்ரீன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை மையத்தின் அதிகாரபூர்வ அறிக்கையின்படி, மும்பைக்கு செப்டம்பர் 9-12-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் செப்டம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் தானே, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours