30 ஆண்டுகளுக்குப் பின் தேர் வெள்ளோட்டம்…

Spread the love

30 ஆண்டுகளுக்குப் பிறகு இலஞ்சி திருவிலஞ்சி முருகன் ஆலயத்தில் திருத்தேர் வெள்ளோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி ஆன்மிக ஸ்தலங்கள் நிரம்பிய மாவட்டமாகும். இங்கு புகழ்பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம், குற்றாலநாதர் ஆலயம், பண்பொழி திருமலை முருகன் ஆலயம் உள்ளிட்ட ஏராளமான ஆலயங்கள் உள்ளன. மேலும் இந்தப் பகுதியில் அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருவிலஞ்சி முருகன் ஆலயம் சித்திரா நதியின் கரையில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் 1993-ம் ஆண்டுவரை தேர் இருந்து வந்த நிலையில் அந்த ஆண்டு தேர் தீப்பிடித்து எரிந்தது. இதன் தொடர்ச்சியாக 30 ஆண்டு காலமாக திருவிலஞ்சி முருகன் ஆலயத்தில் தேரோட்டம் இல்லாத நிலை இருந்து வந்தது.

இதையடுத்து பக்தர்களின் தொடர் கோரிக்கைகளை தொடர்ந்து பக்தர்களின் பங்களிப்போடு 1 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய தேர் வடிவமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது.

தேர் செய்யும் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தேரின் வெள்ளோட்டம் இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று ஆலயத்தின் சுற்று பிரகார பகுதியில் வெகு கோலாகலமாக தேர் வலம் வந்தது. இதில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளாக வந்த பக்தர்கள், பொதுமக்கள் தேரை வடம் பிடித்து அரோகரா கோஷம் முழங்க நிலைக்கு கொண்டுவந்தனர்.. இதன் தொடர்ச்சியாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours