மழையால் நிகழ்ச்சிகள் ரத்து.! தனது சொந்த தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு…

Spread the love

இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , தனது சொந்த சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இருந்தார். ஆனால் அங்கு மழை பெய்த காரணத்தால் சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

கொளத்தூர் தொகுதியில் பள்ளி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மழையால் ரத்து செய்யப்பட்டது . இதனை அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதன் பிறகு, திருவிக நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளையும், மின்சாரத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடங்களையும், மழைநீர் சேகரிப்பு மையங்களையும் பார்வையிட்டார். மேலும், உணவு பொருள் வழங்கள் கட்டடங்களை பார்வையிடுகிறார்.

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் சேகர் பாபு, துரைமுருகன் , கே.என்.நேரு சென்னை மேயர் பிரியா ராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். கொளத்தூர் தொகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours