தினமலர் நாளேட்டின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திடுக – திருமாவளவன் வலியுறுத்தல்

Spread the love

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து செய்தி வெளியிட்ட பிரபல நாளேட்டின் மீது அரசு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 1,545 தொடக்கப் பள்ளிகளில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தை அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக முடிவெடுத்து அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 1978 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை, நாகை மாவட்டம் திருக்குவளை பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கி வைத்தார் .

விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம் பல ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற உள்ளதால் இந்த திட்டத்திற்கு பல அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரபல நாளிதழான தினமலரில் முதல்வரின் காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது . அதில் மாணவர்கள் எல்லோருக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது.வீட்டில் சாப்பிட்டு வரும் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும் அங்கும் சாப்பிடுகின்றனர். இதனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் இயற்கை உபாதைக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அரசுக்கு எதிராக தினமலரின் இந்த செய்திக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் அவரது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் .

இதுகுறித்து தொல்.திருமாவளவன் விடுத்துள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :

எளியோரின் பிள்ளைகள் இருவேளை உணவு உண்பதையும் ஏற்கமனமில்லா எத்திப் பிழைக்கும் கும்பல்.

உடல் உள்ளம் யாவும்
சனாதன நஞ்சில்
ஊறிக் கொழுத்த
சாதிஆதிக்கத் திமிர்.

கடைநிலையில் உழலுவோர் கடைத்தேறக் கூடாதென காலமெல்லாம் சதிசெய்த கழிசடைகளின் கழிவுப்புத்தி.

இது திமுக அரசின் திட்டத்துக்கு எதிரான
காழ்ப்பு மட்டுமல்ல; எளியோருக்கு எதிரான வன்மம்.

இவர்களைக் கண்டிப்பது மட்டுமல்ல; சட்டப்படி தண்டிக்கவும் வேண்டும் என தொல்.திருமாவளவன் விடுத்துள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours