விஜயகாந்த் உடல்நலத்தில் பின்னடைவு !

Spread the love

கேப்டன் விஜயகாந்தின் உடல்நலத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இளைய மகன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளது தேமுதிக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதற்கிடையே நீரிழிவு நோய் காரணமாக கடந்த ஆண்டு அவரது வலது கால் விரல்கள் அகற்றப்பட்டன.

நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் அவரது வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னால் அவரது விரல் அகற்றப்பட்டது.

இந்த நிலையில்,தேமுதிக நிறுவன தலைவரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன், இளைய மகன் திரைப்பட நடிகர் சண்முக பாண்டியன் இருவமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயபிரபாகரனிடம் கேப்டன் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அவர்,கேப்டன் விஜயகாந்தின் உடல்நலத்தில் சற்று பின்னடைவு தான்,ஆனால் கேப்டன் விஜயகாந்த் 100 வருடம் நல்லா இருப்பார், அவர் பழையபடி பேசுவார், எழுந்து வருவார் அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

கேப்டன் விஜயகாந்தின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாமல் இருப்பது தேமுதிக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours