விஜயலட்சுமி விவகாரம்… சீமானிடம் விசாரணை.?

Spread the love

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அண்மையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதாவது ஏற்கனவே கடந்த 2011 சீமான் மீது அளித்த புகார் பற்றி மீண்டும் புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் ஏமாற்றிவிட்டார் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் மகளிர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

முன்னதாக, காவல்துறை துணை ஆணையர் நடிகை விஜயலட்சுமியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தி பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதன் பிறகு திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்திற்கு நேற்று முன்தினம் நடிகை விஜயலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

நீதிபதி முன்பு விஜயலட்சுமி ஆஜராகி விசாரணை நடந்து முடிந்த நிலையில், அதனை அடுத்து சீமானிடம் விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டு காவல்துறை ஊட்டி செல்ல உள்ளதாக நேற்று தகவல் வெளியாகி இருந்தது. அவர் நேற்று ஊட்டியில் இருந்ததாகவும் தக்வல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், தற்போது வரை சீமான் மீது எஃப்.ஐ.ஆர் எதும் பதிவு செய்யப்படடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார். அவருக்கு துணையாக வீரலட்சுமி என்பவரும் உள்ளார் என்றும்,

சீமானிடம் பணம் பறிக்கும் முயற்சியில் அவர் மீது பொய் புகார் அளித்துள்ளனர் என்றும், விஜயலட்சுமி ஏற்கனவே கன்னட நடிகர் சிலரிடம் பணம் பறிக்கும் நோக்கில் பாலியல் பொய் புகார் அளித்துள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகிய இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours