ஒரு கிலோ மீட்டர் தூரம் தலைகீழாக நின்று பைக் ஓட்டி வாலிபர் உலக சாதனை!

Spread the love

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தலைகீழாக நின்று பைக் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த வாலிபரான உதயச்சந்திரன் பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர். இவர், சிறு வயதில் இருந்தே இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தி சாதனை படைக்க வேண்டும் என்று பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், தலைகீழாக நின்று கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம், இரு சக்கர வாகனத்தை ஓட்டி அசத்தியுள்ளார். பெருங்களத்தூர் ஜிகேஎம் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் தலைகீழாக நின்று இரு சக்கர வாகனத்தை நேற்று அவர் இயக்கினார்.

இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக இவர் உரிய பாதுகாப்புடன் பயிற்சிகள் மேற்கொண்டார். சோழன் புக் ஆப் வேல்ட் ரெக்கார்டு என்ற அமைப்பு இளைஞர் உதயச்சந்திரன் உலக சாதனை படைத்ததாக அங்கீகரித்து, சான்றிதழ் வழங்கியது.

தலைகீழாக நின்று கொண்டு பைக் ஓட்டி சாதனை படைத்து இளைஞருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours