இளைஞர்கள் கலைஞரின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் !

Spread the love

இளைஞர்கள் கலைஞரின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவற்றுடன் விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரி இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தினர்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்ற விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பணி நியமனம் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.

அப்போது பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “இந்த வேலை வாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டது தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வரலாற்றை தற்போது உள்ள இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours