ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கான ஆய்வுக்குழு உறுப்பினர்கள் அறிவிப்பு!

Spread the love

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு மும்மரம் காட்டி வருகிறது. இதற்கான மசோதாவை வரும் 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்ற திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த சமயத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிறப்பு குழுவை மத்திய அரசு சமீபத்தில் அமைத்தது.

முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டது. ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடத்துவது சாத்தியமா என்பது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முடிவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் தலைமையிலான சிறப்பு குழுவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி இடம்பெற்றுள்ளனர். மேலும், குலாம் நபி ஆசாத், என்கே சிங், சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே இடம்பெற்றுள்ளனர். மேலும், ஊழல் ஒழிப்பு முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரியும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல், குழுவின் கூட்டங்களில் மத்திய சட்ட அமைச்சர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours