சூதாட்டம் குறித்த விளம்பரங்களை அனுமதிக்க வேண்டாம்.. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் !

Spread the love

சூதாட்டம் குறித்த நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களை அனுமதிக்க வேண்டாம் என்று ஊடக நிறுவனங்களுக்குத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஊடக நிறுவனங்கள், ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் சூதாட்டம் குறித்த விளம்பரங்கள், விளம்பர உள்ளடக்கத்தைக் காட்டுவதைத் தவிர்க்குமாறு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுரையைக் கடைப்பிடிக்கத் தவறினால், பல்வேறு சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

சூதாட்ட பந்தய தளங்களின் விளம்பரங்கள் நுகர்வோருக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு, நிதி மற்றும் சமூகப்பொருளாதார ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பொறிமுறை, பணமோசடி நெட்வொர்க்குகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதால் நாட்டின் நிதிப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அது கூறியுள்ளது.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுடன், இதுபோன்ற விளம்பரங்களுக்கு பணம் செலுத்த கருப்புப் பணம் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் என்று அமைச்சகம் ஆலோசனையில் கூறியுள்ளது.

அந்த வகையில், கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் போது சூதாட்டம் மற்றும் சூதாட்டத் தளங்களின் நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களை விளம்பர இடைத்தரகர்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் உள்ளிட்ட சில ஊடக நிறுவனங்கள் அனுமதித்து வருவதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.  

Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours