இந்திய குடிமகனானார் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார்…

Spread the love

“கனடியன் குமார்” என்று அடிக்கடி ட்ரோல் செய்யப்படும் அக்‌ஷய் குமார், கனடா நாட்டு குடியுரிமை மற்றும் இந்திய குடியுரிமை இல்லாததற்காக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இப்போது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடிமகன்.  கனடா குடியுரிமை பெற்றிருந்த 55 வயதான அக்ஷய்குமார், ஆகஸ்ட் 15, செவ்வாயன்று, அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணங்களின் படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் “மனம் மற்றும் குடியுரிமை இரண்டும், ஹிந்துஸ்தானி தான்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் “இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! ஜெய் ஹிந்த்!”. என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  “கனேடியன் குமார்” என்று அடிக்கடி ட்ரோல் செய்யப்படும் அக்‌ஷய், அவரது திரைப்படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் அவர் எடுத்த சில மிகையான தேசியவாத செயல்பாடுகளால் மேலும் விமர்சனத்திற்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டில், நடிகர் அக்‌ஷய் தனது கனேடிய குடியுரிமையைத் துறந்து இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்த கோவிட் தொற்று காரணமாக, அது தாமதமானது.

நடிகர் அக்‌ஷய் கடைசியாக OMG 2 திரைப்படத்தில் பங்கஜ் திரிபாதியுடன் நடித்தார்.  செப்டம்பரில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் சூரரைப் போற்று என்ற தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் அவர் நடித்து வருகிறார். 


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours