இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதி !

Spread the love

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலக பகுதிகளிலும், கிராமப்புற பகுதிகளிலும் தமிழக அரசின் பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. சென்னை, தமிழ்நாட்டில் உள்ள இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இ சேவை மையங்களை DigiPay வரம்பிற்குள் கொண்டுவந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இ-சேவை மையங்களில் ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

தமிழக அதிகாரிகள் தகவல் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலக பகுதிகளிலும், கிராமபுற பகுதிகளிலும் தமிழக அரசின் பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இ-சேவை மையங்கள் மூலம், அரசு சார்ந்த பல சான்றிதழ்கள் எடுத்தல், ஆதார் உள்ளிட்ட கார்டுகள் திருத்தம் செய்தல் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்த நிலையில், இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டு உள்ளது. வங்கி ஏடிஎம்கள் தவிர, பொதுத்துறை நிறுவனமான இந்திய அஞ்சல் துறை ஏடிஎம் மற்றும் பணம் பெறும் கார்டு வசதிகளை பெற்றுள்ளது, அதுபோல தற்போது இ-சேவை மையத்தையும் மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் இனி இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியா அறிமுகமாகவுள்ளது. இந்த வசதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours