இன்று டெல்லி புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின் !

Spread the love

டெல்லியில் இன்று ஜி20 உச்சி மாநாடு துவங்குகிறது. அமெரிக்க அதிபர் உள்பட உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தலைநகர் டெல்லியில் குவிந்துள்ளனர். இன்று செப்டம்பர் 9ம்தேதி இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், உள்நாட்டு தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்த விருந்தில் பங்கேற்க தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் இன்று செப்.9ம் தேதி டெல்லி புறப்பட்டு செல்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விருந்தில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours