சுற்றுலா ரயிலில் தீ விபத்து !

Spread the love

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் இருந்த பயணிகள் சிலர் சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைத்த போது தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒரு பெட்டியில் பற்றிய தீ மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியதில் 9 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயிலில் வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours