களப்பணிக்கு அர்த்தம் தெரியாத அண்ணாமலை…. கடுமையாக விமர்சித்த காயத்ரி ரகுராம் !

Spread the love

இது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மாநாடு அல்ல. இது தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அதிமுக தொண்டர்கள் மாநாடு என்றும் பாஜகவுக்கு 3% வாக்குகள் தான் இருக்கிறது என்ற உண்மை தெரியாமல் ஆடு ஆடுகிறது என்று காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் மதுரையில் எழுச்சிமிகு மாநாடு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் சுமார் 25 லட்சம் பேர் பங்கேற்றனர்.

மேலும் அதிமுக கட்சி தொடங்கி 51வது ஆண்டை எட்டியதை நினைவூட்டும் வகையில் 51 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியினை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். எடப்பாடி பழனிச்சாமி மாநாட்டு திடலில் காலை கொடி யேற்றிய நேரத்தில் சாலைகளிலும், மாநாட்டு திடலிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டதால் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.

இந்த நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் காயத்ரி ரகுராம், இது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மாநாடு அல்ல. இது தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அதிமுக தொண்டர்கள் மாநாடு.

தலைவர்கள் பேசும்போது கூட்டம் கலையவில்லை. காலி நாற்காலிகளைக் காண முடியாது. இது தெரியாமல் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் சொன்ன ஒரு முதிர்ச்சியற்ற ஒருவர் மிகப்பெரிய கட்சியில் இருந்து ஒரு தலைவரை வீழ்த்த முயற்சிக்கிறார்.

தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகளைக் கொண்டுவர முயன்று, ஒரு தலைவரை வெளியே இழுத்து, அந்தத் தலைவரையும் முதுகில் குத்தினார். தேர்தல், களப்பணி, பூத் கமிட்டி என்று அர்த்தம் தெரியவில்லை, தமிழகத்தில் பாஜகவுக்கு 8% என்று சொல்லி பொய்யாக வாழ்கிறார்கள்.

பாஜகவுக்கு 8% வாக்குகள் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாஜகவுக்கு இன்னும் 3% வாக்குகள்தான் இருக்கிறது என்ற உண்மை தெரியாமல். ஆடு ஆடுகிறது.. வழி தவறிவிட்டது என்று கடுமையாயக விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ராமநாதபுரத்தில் நடைபெற்ற அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்கவிழா நிகழ்ச்சியில், அமித் ஷா வருகை தந்த போது குற்றமின்றி நாற்காலிகள் காலியாக இருந்ததை கூட்டிக்கட்டியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours