பொன்முடி மீதான வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம் !

Spread the love

அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீதான வழக்கு விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக, அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் பொன்முடி உள்ளிட்ட ஐந்து நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். அப்பொழுது பொன்முடி தரப்பு வழக்கறிஞர் தமிழக உயிர்த்தெழுத்துறை அமைச்சர் பொன்முடி இந்த வழக்கிலிருந்து விடுவிக்க நீதிபதி பூர்ணிமாவிடம் மனு அளித்திருக்கிறதாக தெரிவித்தனர்.

மேலும் இவ்வழக்கனையை விசாரித்து தண்ணீர் நீதிபதி பூர்ணிமா இது வழக்கின் விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours