’லியோ’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு… விஷால் மறுத்த காரணம் ?!

Spread the love

நடிகர் விஜயின் தீவிரமான ரசிகரான விஷால் ‘லியோ’ படத்தில் நடிகர் லோகேஷ் கனகராஜ் கேட்டதாகவும் அந்த வாய்ப்பை விஷால் மறுத்ததாகவும் செய்திகள் வந்தது. அது உண்மை தான் என விஷால் உறுதிப்படுத்தியுள்ளார்.

தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய விஷால், ‘’லியோ’ படத்தில் என்னை நடிகர் விஜய்க்கு இளைய சகோதரராக நடிக்க வைப்பதற்காக லோகேஷ் கனகராஜ் கேட்டிருந்தார்.

தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேல் என்னுடைய கால்ஷீட் கேட்டிருந்தார். அதே சமயத்தில் நான் வேறு படத்திலும் நடிப்பதற்கு கமிட்மெண்ட் கொடுத்திருந்தேன். ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் வேலை செய்வது எனக்கு கடினம். அதனால், ‘லியோ’ படத்தின் வாய்ப்பை மறுத்து விட்டேன். நடிகர் விஜய்யின் ரசிகன் நான். எனக்கு தோன்றும் போதெல்லாம் அவரை மாஸாக காட்ட வேண்டும் என கதை எழுதுவேன். அவரை இயக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். விரைவில் அது நிறைவேறும்” எனக் கூறியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours