சனாதனம் குறித்து நான் பேசியதில் எந்த தவறும் இல்லை – அமைச்சர் உதயநிதி !

Spread the love

சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன கொள்கை பற்றி விமர்சித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில், சனாதனம் என்பது டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதற்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், இந்து அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் தகுதியை சேகர் பாபு இழந்துவிட்டார். எனவே, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனடியாக பதவி விலக வேண்டும். செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு முன் அவர் பதவி விலகவில்லை என்றால்,செப்டம்பர் 11ம் தேதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தில் முழுவதும் இந்து அறநிலையத்துறை அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி, சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறில்லை. பேசகூடாது சொன்னா திரும்ப திரும்ப பேசுவேன். நான் பேசியதில் தவறு இல்லாத போது அமைச்சர் சேகர்பாபு எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும்.

சனாதனத்தில் பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டிருந்தார்கள். சனாதனத்தில் கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது. திராவிட மாடலில் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலை உணவு திட்டம், பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி கொண்டு வந்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours