‘தளபதி 68’ டெஸ்ட் ஷூட் முடிந்து சென்னை திரும்பினார் விஜய்…

Spread the love

அமெரிக்கா சென்றிருந்த நடிகர் விஜய் தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில், விமானநிலையத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்துள்ள ‘லியோ’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் தமிழகத்தில் நடக்கிறது. இந்தப் படத்திற்கான முன்பதிவு இங்கிலாந்தில் தற்போதே தொடங்கி விட்டது.

’லியோ’ படத்திற்கு அடுத்து நடிகர் விஜய் ‘தளபதி 68’ படத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இதில் ஒன்று இளம் வயது கதாபாத்திரம் என்பதால், விஜய்யை இளமையாக காட்ட முடிவு செய்துள்ள வெங்கட் பிரபு, இதற்கான பணிகளுக்காக விஜய்யுடன் கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அதன் பணிகளை ஒரு சில நாட்களில் முடித்துவிட்டு வெங்கட் பிரபு கடந்த வாரமே சென்னை திரும்பினாலும், நடிகர் விஜய் அங்கு தங்கி ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நடிகர் விஜய் இன்று சென்னை திரும்பி உள்ளார். அவர் சென்னை விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மாஸ்க் அணிந்தபடி நடந்து வந்த விஜய்யுடன் அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, சிறிது நேரம் கலந்துரையாடிய காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours