அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் டெல்லி பயணம்.!

Spread the love

நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஆறு மாத காலமே உள்ள காரணத்தால் பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளன. கூட்டணி விவகாரங்கள், தொகுதி பங்கீடுகள் குறித்த ஆலோசனைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) இந்தியா (I.N.D.I.A) கூட்டணி என பாஜக மற்றும் காங்கிரஸ் தங்கள் கூட்டணி வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வருகிறது.

இந்த சமயத்தில் நாளை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டுதொடர் நடைபெற உள்ளதால் அந்த சிறப்பு கூட்டத்தில் தீர்மானங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் மத்திய அரசின் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours